search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை சாவடி"

    • பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழாவை எழுச்சியாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

    நாகர்கோவில்:

    75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தினவிழாவை விமர்சையாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழாவை எழுச்சியாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா பரவ லின் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படாத நிலையில் பள்ளி, கல்லூரி களில் கண்கவர் கலை நிகழ்ச்சி களுடன் சுதந்திர தினவிழாவை கொண்டாடு வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    விழாவில் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோத னைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். அஞ்சு கிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமை யாக சோதனை செய்யப் பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நிய மிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள். கடலோர காவல் படை போலீசாரும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷ னுக்குட்பட்ட பகுதியில் இரவு ேராந்து பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். கன்னி யாகுமரி பகுதியில் உள்ள லாட்ஜிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். லாட்ஜிகளில் உள்ள வருகை பதிவேட்டை சோதனை செய்தனர். லாட்ஜிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பிளாட்பாரங்கள், ெரயில்வே தண்டவாளங் களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ள பார்சல்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகிறார்கள்.

    கோவில்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • கேரளாவில் தற்போது புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    செங்கோட்டை:

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவலால் தமிழக-கேரள எல்லையான புளியரை உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் கால்நடை துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    குரங்கு அம்மை

    இதன் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களுக்கும் இந்த பாதிப்பு பரவி விடாமல் இருக்க மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் புளியைரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் பொதுமக்கள் தொழில் நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும் என பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் கேரளா செல்கின்றனர்.

    தீவிரப்படுத்த வேண்டும்

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து பாலருவி, கழுதுருட்டி அருவி, தென்மலை அணை பகுதி, குற்றாலம், குண்டாறு உள்ளிட்டவற்றில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளதால் புளியரை சோதனை சாவடியில் கொரோனா பரவலின்போது சுகாதாரத்துறை கடைபிடித்த அதே நடைமுறைகளை தற்போதும் தீவிரப்படுத்த வேண்டும்.

    கோரிக்கை

    அவ்வாறு செய்வதன் மூலமாக தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சுகாதரத்துறையினரிடம் தெரிவித்தால், அவர்கள் அலட்சியமாக பதில் கூறுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உடனடி நடவடிக்கை எடுத்து சோதனை சாவடியில் மருத்துவர்கள் முகாமிட்டு அந்த வழியாக வருபவர்களை பரிசோதனை செய்ய ஆவண செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×