search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு -புளியரை சோதனை சாவடியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படுமா?
    X

    கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு -புளியரை சோதனை சாவடியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படுமா?

    • கேரளாவில் தற்போது புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    செங்கோட்டை:

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவலால் தமிழக-கேரள எல்லையான புளியரை உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் கால்நடை துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    குரங்கு அம்மை

    இதன் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களுக்கும் இந்த பாதிப்பு பரவி விடாமல் இருக்க மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் புளியைரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் பொதுமக்கள் தொழில் நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும் என பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் கேரளா செல்கின்றனர்.

    தீவிரப்படுத்த வேண்டும்

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து பாலருவி, கழுதுருட்டி அருவி, தென்மலை அணை பகுதி, குற்றாலம், குண்டாறு உள்ளிட்டவற்றில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளதால் புளியரை சோதனை சாவடியில் கொரோனா பரவலின்போது சுகாதாரத்துறை கடைபிடித்த அதே நடைமுறைகளை தற்போதும் தீவிரப்படுத்த வேண்டும்.

    கோரிக்கை

    அவ்வாறு செய்வதன் மூலமாக தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சுகாதரத்துறையினரிடம் தெரிவித்தால், அவர்கள் அலட்சியமாக பதில் கூறுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உடனடி நடவடிக்கை எடுத்து சோதனை சாவடியில் மருத்துவர்கள் முகாமிட்டு அந்த வழியாக வருபவர்களை பரிசோதனை செய்ய ஆவண செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×