search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் போட்டிகள்"

    • 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட் டுத்துறை, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அண்ணா சைக்கிள் போட்டி கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவி களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    போட்டியானது 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஐ.டி. கார்னரில் இருந்து தொடங்கி பண்பொழி ரோடு வழியாக செங்கோட்டை ரெயில்வே கேட் வரை சென்றடைய உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 13-ந் தேதி மாலை 5.30 மணி ஆகும்.

    முன்பதிவு செய்திட மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9788918406, 9489153516 என்ற செல்போன் எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ள லாம். போட்டியில் பங்கு பெறும் அனைவரும் இந்தியா வில் தயாரான சாதாரண மிதி வண்டியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பங்கு பெறும் அனைவரும் தங்கள் பள்ளி- கல்லூரியில் இருந்து 'போன்பைடு' சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம், 4-ம் பரிசு முதல் 10-வது பரிசு வரை ரூ. 250 மற்றும் சான்றி தழ்களும் வழங்கப்படும்.

    பரிசுத் தொகையானது நிப்ட் பேங்கிங் மூலம் வழங்கப்பட உள்ளதால் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வங்கி கணக்கு புத்தகத்தின் முதற்பக்க நகலை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    இந்த சைக்கிள் போட்டிகள், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி திருமாநிலையூர் ரவுண்டானா சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வரை 10 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி கரூர் பஸ் நிலைய ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கம் வரை 15 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி கரூர் பஸ் நிலைய ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கம் வரை 15 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி சேலம் பைபாஸ் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கம் வரை 20 கிலோ மீட்டர் தூரமும் நடைபெற்றது இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.250 வீதமும் பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்பட்டது.

    • பெரம்பலூரில் நாளை அண்ணா சைக்கிள் போட்டிகள் நடை பெறுகிறது.
    • வீரர், வீராங்கனைகள் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 7.45 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த சைக்கிளுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வந்து கலந்துகொள்ள வேண்டும். வீரர், வீராங்கனைகள் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 15-ந்தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தலா ரூ.250 வீதம் பரிசு தொகைக்கான காசோலையாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×