search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை"

    • விபத்தில் சிக்கிய புதுமண தம்பதிக்கு செல்போன் வெளிச்சத்தில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடை பட்டது.

    விழுப்புரம்: 

    விபத்தில் சிக்கிய புதுமண தம்பதிக்கு செல்போன் வெளிச்சத்தில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த தம்பதிக்கு சென்னை அம்பத்தூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி மற்றும் உறவினர்கள் ஒரு காரில் விழுப்புரம் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த கார் திண்டிவனம் அருகே உள்ள நத்தமேடு என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

    இதில் புதுமண தம்பதி மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடை பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வெளிச்சத்தை ஏற்படுத்தி சிகிச்சைக்கு உதவினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவுக்காவது 24 மணி நேர மின்சார சேவை அளிக்க வேண்டும் என நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×