search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்த தொழிலாளி"

    • கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
    • தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கலையரசி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    தற்கொலை

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தை மேடு ஏரி பகுதிக்கு வந்தார்.

    தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்அந்த இடத்தை தேடி கண்டு பிடித்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சென்றன.ர். அப்போது அங்கு கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    ×