search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செப்பு பட்டயங்கள்"

    • செப்புப்பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை ஆகும்.
    • செப்புபட்டயங்கள் கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும்.

    தூத்துக்குடி:

    திருக்கோவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு நூலாக்க திட்டத்தின் பணிக்குழுவினர் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணை ஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 4 செப்புப் பட்டயங்களையும் கண்டறிந்தனர். இதில் 2 மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது. மேலும் செப்புப்பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை ஆகும்.

    இந்த செப்புபட்டயங்கள் கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் 2 பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும், மற்ற 2 பட்டயங்கள் கோவில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டவையாகும். முதல் பட்டயம் கி.பி.1637-ம் ஆண்டைச் சேர்ந்தது. அதில் காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்கு திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பது குறித்தும், 2-வது பட்டயத்தில் கோவிலுக்கு வழங்கிய நிலதானம் மற்றும் அதன் எல்லை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3-வது பட்டயத்தில் உபயதாரர் பற்றியும், 4-வது பட்டயத்தில் மண்டகபடிதாரர்களுக்கு பட்டு கட்டும் மரியாதை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×