search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செப்பரை அழகிய கூத்தர் கோவில்"

    • அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஜீவநதியாய் விளங்கும் தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் அருள்பாலித்து வருகின்றனா்.

    கொடியேற்றம்

    நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகின்றது. மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகி யோர்க ளுக்கு சிவபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்த சிறப்புடையது ஆகும்.

    இங்கு எழுந்தருளியுள்ள அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிபட்டம் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடந்து கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராத னைகள் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    வருகிற 22-ந் தேதி (வியாழன்) ஸ்ரீநடராஜ பெருமான் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்திற்கு ஏழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து சிகப்பு சாத்தி, வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி தாிசனம் நடைபெறுகின்றது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதி அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சனம் மற்றும் நடன தீபாராதனையும், சுவாமி வீதி உலாவும் நடை பெறுகிறது. கொடியேற்ற விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    ×