search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியகிரகண வழிபாடு"

    • ராமேசுவரம் கோவிலில் சூரியகிரகண சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதைத்தொடர்ந்து சுவாமி அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. 6 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

    அதன் பின்னர் கோயில் நடைகள் 1 மணிக்கு சாத்தப்பட்டன. மாலை 3 மணி அளவில் கோவில் நடைகள் திறக்கப்பட்டது. ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சூரிய கிரகணத்தை யொட்டி கோவிலில் இருந்து சாமி புறப்படாகி அக்னி தீர்த்த கடற்கரையை வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு கிரகண தீர்த்தவாரி நடைபெற்றது.

    கோவில் குருக்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்தார். இதைத்தொடர்ந்து சுவாமி அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட சாமி கோவிலை சுற்றி 4 ரத வீதியில் வலம் வந்து இரவு 7 மணியளவில் கோவிலை வந்தடைந்தார்.

    இதனை தொடர்ந்து கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு அர்த்த சாம பூஜை நடைபெற்று கோவில் நடைகள் அடைக்கப்பட்டது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோவிலி ல் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    ×