search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவிட்சர்லாந்து பாராளுமன்றம்"

    • முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
    • தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சூரிச்:

    ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது, இது ஏற்கனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது.

    இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும். எனினும், மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என கூறப்படுகிறது. தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

    • பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னேவில் உள்ள பாராளுமன்றத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு வாலிபர் சுற்றி கொண்டிருந்தார். இதையடுத்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சோதனை செய்தபோது குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்தார். மேலும் அவரிடம் வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் காரில் வந்தது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அந்த வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் வெடிகுண்டு இல்லை.

    பிடிபட்ட நபர் யார்? எந்தவித வெடிகுண்டு வைத்திருந்தார் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. பாராளுமன்றத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

    ×