search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதர்சனர்"

    • திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.
    • பெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என வாழ்த்திப் பாடியுள்ளார்.

    திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.

    இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.

    இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர்.

    திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

    இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

    பெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு' என வாழ்த்திப் பாடியுள்ளார்.

    திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

    • கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்வார்.
    • நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பெருமாள் கோவில்களில்

    8 கரங்கள் கொண்ட சுதர்சனரையும்,

    16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும்,

    32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம்.

    பொதுவாக, 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார்.

    'ஷட்கோண சக்கரம்' என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும், 'திரிகோண சக்கரம்' எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

    சுதர்சனர் தனது திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம்,அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம்,

    கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார்.

    சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாக கூறப்படுகிறது.

    அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி.

    மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான்.

    அவற்றை அழித்து மன அமைதியை தருகிறார் சுதர்சன மூர்த்தி.

    கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்வார்.

    கெட்ட கனவுகள், மன சஞ்சலம், சித்த பிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபட செய்வார்.

    ஜாதகத்தில் 6, 8, 12ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீசுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

    சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.

    நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • திருவாழி ஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.
    • ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.

    திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் இருப்பதைப் பார்த்திருப்போம்.

    ஆனால் அந்த சக்கரம் யாரு? ன்னு நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.

    அந்த சக்கரம் யாரு ?அதன் மகிமை என்ன? என்பதைப் பற்றி இந்த பதிவில் அடியேன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    பக்தில பல வகை உண்டு.

    நமக்கு தெரிந்த ஆன்மீகக் கருத்துக்களை நாலு பேர் தெரிந்து கொள்ளுவது ஒரு வகையான பக்தி என்று சொல்லலாம்.

    அடியேனும் அந்த வகைதான்.

    அடியேன் பதிவின் மூலமாக பயன்பெறுகிறார்கள் என்பது அடியேன் சுவாமிக்கு செய்யும் கைங்கரியம் எண்ணி இந்த பதிவு

    சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்

    சக்கரத்தாழ்வார்,

    சுதர்சனர்,

    சக்கரராஜன்,

    நேமி,

    திகிரி,

    ரதாங்கம்,

    சுதர்சனாழ்வான்,

    திருவாழி ஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.

    மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோவில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார்.

    'சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.

    திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், வாகனமான கருடனை

    கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின்

    பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழி ஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ

    சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.

    • `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
    • கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அழகாய் காட்சி தருகிறார்.

    வடசென்னை, முத்தியால் பேட்டையில் இத்திருக்கோயில் பவளக்காரத் தெருவில் உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான தலம் என்று சொல்லப்படுகிறது.

    மூலவர் - ருக்மிணி பாமா சமேத ஸ்ரீவேணுகோபாலன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.

    தனி சன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், சுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.

    திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாசனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்பு காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

    ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்

    "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அலங்காரங்கள் மிக நேர்த்தியாய் செய்யப்பட்டு, உற்சவங்கள் கண்டருளும் பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் மிகவும் அழகு.

    ×