search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம் மார்கழி திருவிழா"

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
    • 5-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 3-ம் திருவிழாவன்று இரவு 10.30 மணிக்கு கோட் டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமா ரசுவாமி ஆகியோர் தமது தாய், தந்தையருக்கு நடக் கும் திருவிழாவில் பங்கேற்க வந்த 'மக்கள்மார் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் (1-ந்தேதி) காலை கருட தரிசனம் நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு ரிஷப கருட அன்னவாகனத் தில் சுவாமி திருவீதி உலா, பஞ்சமூர்த்தி தரிசனம் நடந் தது. பின்னர் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெரு மாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீர மார்த்தாண்ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் கோவில் முன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளினர்.

    அதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில் சுவாமிகளையும், கோவில் ராஜகோபுரத்தையும் கருடன் சுற்றி வந்த 'கருட தரிசனம்' நடந்தது. இதைக்கண்ட ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை உஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடந்தது.

    6-ம் திருவிழாவான நேற்று காலை பூங்கோ யில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, இரவு இந்திர வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 7ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி, அம் பாள், பெருமாள் அலங்கார கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. மாலை 4.30 மணிக்கு நடராஜ சுவா மிக்கு திருச்சாந்து சாற்று தல், 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு மண்டகப்படி, இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடக்கிறது.

    8-ம் திருவிழாவான நாளை (4-ந்தேதி) காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா, காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு நடராஜ பெருமாளுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அலங்கார மண்டபத்தில் அஷ்டாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடன ராக திருவீதி உலா நடக் கிறது. காலை 8 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயக ரும், சுவாமி தேரில் சுவாமி மற்றும் அம்பாளும், அம்மன் தேரில் அம்பாளும் அலங் காரகோலத்தில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மண் டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தருளல், இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத் தில் சுவாமி திருவீதி உலா, 12 மணிக்கு தாய், தந்தையரின் விழாவில் பங்கெடுக்க வந்த கோட்டாறு வலம்புரி விநாய கர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

    10-ம் நாள் நிறைவு விழா வில் காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம், அஷ்டா பிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா, இரவு 9 மணிக்கு ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×