search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடை இல்லாமல் பணி"

    • 2020 முதல் தற்போது வரை போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை.
    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் சீருடை இல்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்

    கம்பம்:

    தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றின் ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 2 சீருடைகள் போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஆண்டுக்கு 2 செட் சீருடை அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வழங்க வேண்டும்.

    2016ம் ஆண்டு அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 4 சீருடைகள் வழங்கப்படும் என அறி வித்தார்.

    அறிவித்த அடுத்த ஆண்டான 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சீருடை வழங்கப்படவில்லை. 2019ம் ஆண்டு 1 செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் 2020 முதல் தற்போது வரை போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை.

    இது குறித்து அதிகாரி களுக்கு பல முறை அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே சீருடை வழங்காத போக்குவரத்து கழகத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் சீருடை இல்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கோரிக்கையை அரசுக்கும், போக்குவரத்து கழகத்துக்கும் பல முறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே இன்று முதல் சீருடை இல்லாமல் கோரிக்கை அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    ×