search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன தூதரகம்"

    • சீன தூதரகத்துக்குள் காருடன் புகுந்த நபர் யார்? இது தாக்குதலா? விபத்தா? என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வெளியுறவுத்துறை புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சான்பிரான்சிஸ்கோ:

    அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சீன துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சீன தூதரகத்தின் நுழைவாயிலில் வாலிபர் ஒருவர் காரில் வேகமாக மோதினார்.

    இதில் அந்த கார், சீன தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சீன தூதரகத்துக்குள் சென்று காருடன் மோதிய நபரை பிடிக்க முயன்றனர்.

    அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் அந்த நபர் காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சீன தூதரகத்துக்குள் காருடன் புகுந்த நபர் யார்? இது தாக்குதலா? விபத்தா? என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கேத்ரின் விண்டர்ஸ் கூறும்போது, "சீன தூதரக விசா அலுவலகத்துக்குள் காருடன் மோதிய நபரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த போது, தூதரக நுழைவாயிலில் கார் ஒன்று மோதி இருந்தது. அங்கு சந்தேக நபருடன் தொடர்பு கொள்ள முயன்ற போது துப்பாக்கி சூடு நடந்தது என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வெளியுறவுத்துறை புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரில் தூதரகத்தின் ஆவண மண்டபத்திற்குள் நுழைந்தார். இது அங்கிருந்த ஊழியர்கள், மக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்று தெரிவித்தது.

    ×