search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலோன் காலனி"

    • கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புலி புகுந்து ஆடு, மாடுகளை கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    விரைவு படையினர் மற்றும் டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2 இடங்களில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 50 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலும் புலி சிக்கவில்லை. கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் கடந்த 2 வாரங்களாக புலி நடமாட்டம் பற்றி எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து வெளியூர்க ளில் இருந்து வந்த அதிரடி படையினர் திரும்பி சென்றனர். புலி நடமாட்டம் இல்லாததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிற்றாறு பகுதி பொதுமக்க ளுடன் வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது கால்ந டைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக அடைத்து வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்தனர்.

    மேலும் அந்த பகுதி மக்க ளும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அதாவது சிற்றாறு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் கோதையாறு வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    புலி நடமாட்டம் காரணமாக மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் நடந்து வீட்டுக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சிற்றாறு காலனி வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் பேசினார்கள். தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். இன்று அல்லது நாளை முதல் சிற்றாறு சிலோன் காலனி வழியாக அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×