search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு மருத்துவ முகாம்"

    • மருத்துவ முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
    • பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார். துளீர் அமைப்பு சார்பில் மதுரை மருத்துவ கல்லூரி டாக்டர் தர்மராஜ் செல்லையா தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை கண்டறியப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் தினக்கூலி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ராமச்சந்திரன், முனைப்பு அலுவலர் புலவர் மகாமுனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசிரஅள்ளி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார்.மொரப்பூர் அரசு மருத்துவ அலுவலர் வனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.வி.ரவிச்சந்திரன்,ஜி.ரவிச்சந்திரன், தாசிர அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.தமிழ் செல்வி ரங்கநாதன்,துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுகாதார ஆய்வாளர் சங்கர் வரவேற்று பேசினார்.மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன்இம் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து முகாமின் நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார். முகாமில் ரத்த அழுத்தம்,சக்கரை நோய் அளவு,உப்பு அளவு மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்தும் விளக்கப்பட்டது.

    இம்முகாமில் தாசிர அள்ளி,அண்ணா நகர்,தாசிர அள்ளி புதூர்,காந்திநகர், போடிநா யக்கன்பட்டி,ரெட்டிபட்டி, ஆவலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சைகள் பெற்று பயனடைந்தனர்.இம் முகாமில் முல்லை கோபால்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், முன்னாள் துணை தலைவர் ஜெமினி, டி.ஆர்.எஸ். செந்தில் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் ராம்தாஸ் நன்றி கூறினார்.

    • ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மாணவ மாணவியர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஓசூர் ரோஸ், எலைட் ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முகாமில், டாக்டர் வைஷ்ணவி மற்றும் டாக்டர் ரம்யா மாணவ மாணவியருக்கு பரிசோதனைகள் நடத்தி மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

    முன்னதாக சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, கல்லூரியின் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கவிஞர் மணிமேகலை கலந்து கொண்டு பேசினார்.

    கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், ஆடிட்டர் பாலசுந்தரம், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், தமிழ்த்துறை பேராசிரியர் வெங்கடேசன், ரோட்டரி சங்க துணை ஆளுனர் தாட்சாயணி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் பேசினார்கள். மாணவ மாணவியர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடியாத்தத்தில் நடந்தது
    • பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் இ.ஜாவித்அகமது, ஜி.எஸ்.அரசு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆடிட்டர் மோகன், எம்.என். ஜோதிகுமார் உள்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஜெயஸ்ரீகிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்.

    மருத்துவ முகாமை குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.விமல் குமார் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த சோகை குறித்து கண்டறிதல் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர். இதில 600 மாணவிகள் பயன்பெற்றனர்.

    ×