search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பாசிரியர்கள்"

    • தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் செல்வம், நந்தகுமார், கிரேசி குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ராமகேசவன், பொருளாளர் காதர் மொய்தீன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக சிறப்பாசிரியர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.

    • மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படுகிறது.
    • 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள்.

    தாராபுரம் :

    பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் பகுதி நேர சிறப்பாசிரியர்க ளை பணி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதி நேர சிறப்பா சிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறியதாவது:- அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2012ல் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி என 8 பாடங்களை இவர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் வீதம், மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படு கிறது. தொடக்கத்தில் 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள். தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தி.மு.க., தெரிவித்தது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

    கடந்த 11 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

    ×