search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சியோமி Mi 8 லைட்"

    சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #mi8Lite #Xiaomi



    சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.2 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 AIE, 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமராக்கள், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    போனின் டிஸ்ப்ளேவில் வெவ்வேறு விதமாக செல்ஃபிக்களை எடுக்க ஏதுவாக வித்தியாசமான நிறங்களை பிரதிபலிக்கும். இத்துடன் கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi 8 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி  / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.9
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல்
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 1.8um பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

    சியோமி Mi 8 லைட் ஸ்மார்ட்போன் அரோரா புளு, சன்செட் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி Mi 8 லைட் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் இந்திய மதிப்பில் ரூ.14,835, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1699 யுவான் இந்திய மதிப்பில் ரூ.18,020 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1999 யுவான் இந்திய மதிப்பில் ரூ.21,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரெஷர் சென்சிட்டிவ் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கைவிரலை திரையில் வைத்ததும், ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் Mi 8 மாடலில் உள்ளதை விட 29% வரை வேகமாக இயங்குகிறது.



    சியோமி Mi 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2248x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி  / 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8, OIS
    - 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.4, 1.0μm பிக்சல்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பிரெஷர் சென்சிட்டிவ் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்செட் கோல்டு, பிளாக் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் டைட்டானியம் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 3199 யுவான் இந்திய மதிப்பில் ரூ.33,945 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 3599 யுவான் இந்திய மதிப்பில் ரூ.38,192 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய Mi8 முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.21 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 88.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கிளாஸ் பேக் மற்றும் பிரத்யேக வாட்டர் டிராப் ஆர்க் டிசைன், 4 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் 7-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI, 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    செல்ஃபி எடுக்க 20 எம்பி செல்ஃபி கேமரா, ரியல்-டைம் பேக்கிரவுன்டு பிளர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டூடியோ லைட்டிங் எஃபெக்ட், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Mi8 ஸ்மார்ட்போன் 3400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் க்விக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    Mi8 ஸ்மார்ட்போனுடன் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D முக அங்கீகார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.



    சியோமி Mi 8 / Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2248x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி 
    - 8 ஜிபி ரேம் / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி எக்ஸ்ப்ளோரர் எடிஷன்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
    - 20 எம்பி செல்ஃபி கேமரா
    - IR ஃபேஸ் அன்லாக் (Mi 8) / 3D ஃபேஸ் அன்லாக் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்)
    - கைரேகை சென்சார் (Mi 8) / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3400 எம்ஏஹெச் பேட்டரி, QC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்



    சியோமி Mi8 ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி Mi8 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 2699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,460), 128 ஜிபி, 256 ஜிபி வேரியன்ட்கள் முறையே 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,620), 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,785) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சியோமி Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 3699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.39,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 5-ம் தேதி முதல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×