search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையில் நாற்று"

    • சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை குலவையிட்டு பாடினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொட்டக்குடி ஊராட்சியில் கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் நகர்.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மண் சாலை போக்குவரத்திற்கு மட்டுமின்றி, திருவிழா காலங்களில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு ஊர்வலத்துக்கும் முக்கிய பயன்பாடாக உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை இல்லாமல் மிகவும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஆண்டுதோறும் இந்த தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கும்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் தெரு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கூட தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. மாறி உள்ளது. இதனால் மழைநீர் கழிவு நீராக சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதை கண்டித்தும், புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சேரும் சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாற்று நடும்போது குலவையிட்டு தங்களது துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

    ×