search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விரிவுபடுத்தும் பணி"

    • திருச்சி சர்வதேச விமான நிலையப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதையடுத்து வயர்லெஸ் சாலையை ரூ. 11 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

    திருச்சி

    திருச்சி சர்வதேச விமான நிலையப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து வயர்லெஸ் சாலையை ரூ. 11 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

    மேலும் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிக்காக இந்திய விமான நிலைய ஆணையத்தை மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியது. இருப்பினும் அவர்களிடமிருந்து பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சியே மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

    திருச்சி -புதுக்கோட்டை சாலையை இணைக்கும் இந்த வயர்லெஸ் ரோடு 1.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது.தேசிய நெடுஞ்சாலை மற்றும் காஜாமலை மெயின் ரோடு அருகே கே.கே. நகர் பேருந்து நிலையம் மற்றும் சாத்தனூர் மெயின் ரோடு, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றையும் இணைக்கிறது.

    தற்போது 65 அடி அகலத்தில் இருக்கும் வயர்லெஸ் சாலை சென்டர் மீடியனுடன் 100 அடி சாலையாக விரிவுபடுத்த முதற்கட்டமாக மாநகராட்சி ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை- உடையான் பட்டி மெயின் ரோடு இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது,

    சாலை விரிவாக்க பணிகளுக்கு முன்பாக ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்படும். அகற்றாவிட்டால் மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும்.

    இந்த சாலை 100 அடி அகலத்தில் விரிவாக்கம் செய்யும்போது அப்பகுதியில் நிலவும் நெரிசல்கள் பெருமளவு குறையும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மழை நீர் வடிகால்கள் மற்றும் பாதசாரி தளங்களும் அமைக்கப்பட உள்ளது.

    ×