search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலவையகம்"

    • புதுக்கோட்டையில் நவீன சலவையகம்-ஆயத்த ஆடையகம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,


    புதுக்கோட்டை நகராட்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நவீன முறை சலவையகம் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு உற்பத்தி அலகினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சலவைத் தொழில் புரிவோருக்கு, இலவச சலவைப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது இம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இன மக்களில் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் சலவை இயந்திரம், மின் உலர் இயந்திரம், தேய்க்கும் மேசை மற்றும் மின்சார அயன்பாக்ஸ் ஆகியவற்றை கொண்ட நவீன முறை சலவையகம் புதுக்கோட்டை நகரம், சின்னப்பா நகர் அருகில், ஸ்ரீநகரில் மகளிர் சுய உதவிக்குழுவால் தொடங்கப்பட்டு உள்ளது.

    மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் தையல் இயந்திரம், வெட்டும் இயந்திரம், மேசை மற்றும் ஓவர்லாக் இயந்திரம் ஆகியன வாங்கப்பட்டு, புதுக்கோட்டை நகரம், நிஜாம் காலனியில் சுய உதவிக்குழுவினரால் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×