search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வமத கூட்டு பிரார்த்தனை"

    • குமரி கடலில் காந்தியின் அஸ்தி கரைத்த 75-வது ஆண்டு நினைவுநாளையொட்டி நடந்தது
    • காந்தியின் அஸ்தி கரைத்த நினைவு நாளை "சர்வோதய மேளா" என கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி டெல்லியில் பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்லும் போது கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கன்னியாகுமரிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் அந்த அஸ்தி கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் கரைக்கப்பட்டது. காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கன்னி யாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காந்தியின் அஸ்தி கரைத்த நினைவு நாளை "சர்வோதய மேளா" என்ற பெயரில் குமரிமாவட்ட சர்வோதய சங்கம் கடைபிடித்து வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு காந்தியின் அஸ்தி கரைத்த 75-வது ஆண்டு நினைவு நாளான நேற்று குமரி மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் 75-வது சர்வோதய மேளா கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடந்தது.இத்துடன் காந்தி நினைவு நாளான கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 12 நாட்களாக கன்னியாகுமரி காந்தி நினைவுமண்டபத்தில் குமரி மாவட்ட சர்வோதய சங்க பெண்கள் நடத்தி வந்த ராட்டையில் நூல்நூற்கும் தொடர் நூற்பு வேள்வியின் நிறைவு நாள் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சர்வமத கூட்டு பிரார்த்தனையும் பஜனையும் நடந்தது.

    இறுதியாக தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில்உள்ள சர்வோதய சங்கத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், நூற்போர், நெய்வோர் மற்றும் தியாகி கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×