search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்தாரி"

    • ஆசிப் அலி சர்தாரி அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டின் அதிபராக ஆசிஃப் அலி சர்தாரி உள்ளார். இவரின் இளைய மகள் ஆசீபா பராளுமன்றத்தின் என்.ஏ.207 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் முறையாக அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி ஏன்.ஏ.-207 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனால் அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், தனது மகளை நிறுத்தியுள்ளார். நேற்று சிந்து மாகாணம் நவாப்ஷா பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரிடம் வேட்புமனுவை அளித்தார்.

    ஆசிபா பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசீர் பூட்டோ- சர்தாரி தம்பதியின் இளைய மகள் ஆவார். ஆசிபாவின் சகோதரர் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் நாட்டின் மந்திரியாக இருந்துள்ளார்.

    பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் நாவஸ் ஷெரீப் கட்சி ஆட்சி அமைக்க பிலாவல் பூட்டோ ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால், மந்திரிசபையில் இடம் பெற மறுத்துவிட்டார். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.

    சர்தாரி தனது மகள் ஆசிபாவை பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணி என அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாட்டின் பாரம்பரியப்படி மனைவிதான் முதல் பெண்மணியாக அறிவிக்கப்படுவார். ஆனால், பெனாசீர் பூட்டோ இல்லாததால் தனது மகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.

    ×