search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரி செய்யப்பட்டன"

    • ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • 4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மின் பகிர்மான வட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 24-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    வெவ்வேறு பகுதிகளில் செல்லும் உயர அழுத்த, தாழ்வழுத்த மின்பாதைகளில் உள்ள பல்வேறு இடங்களில் 3,210 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. 61 பழுதடைந்த உயர் அழுத்த மின் கம்பங்கள், 119 பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பங்கள், 174 சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன.

    இது தவிர 200 பகுதி களில் தாழ்வாக உள்ள மின்கம்பங்கள் சரி செய்து, 23 தாழ்வான உயர் அழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட மின்கம்பங்கள், 44 தாழ்வாக உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட பின் கம்பங்கள், 250 பழுதடைந்த இழுவை கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் 292 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த பீங்கான்கள் மாற்றப்பட்டுள்ளன. 17 பகுதிகளில் கண்டறி யப்பட்ட பழுதடைந்த மின் புதைவடை பெட்டி சரி செய்யப்பட்டுள்ளன.

    592 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதான ஜம்பர் ஒயர் மாற்றப்பட்டுள்ளன. 140 மின் மாற்றி களில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் சீரமைக்கப்பட்டன.

    மேலும் 513 மின் மாற்றி களில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 128 மில் மாற்றிகளில் எண்ணெய் அளவு சரிபார்க்க ப்பட்டுள்ளது.

    4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன. 39 பகுதிகளில் கண்டறியப்பட்ட வெளியில் தெரியும் நிலையில் இருந்த புதைவட கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×