search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பா பயிர் காப்பீடு"

    • சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிரை கடந்த 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விவசாயிகளின் கோரிக்கை யினை தொ டர்ந்து, தமிழக அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு சம்பா நெற்பயிரை வரும் 22-ந் தேதி வரை காப்பீடு செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

    சம்பா நெல்-11 பயிருக்கு இது நாள் வரை பயிர் காப்பீடு செய்யாத விவசா யிகள் நெல்-11 பயிர்காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகையான ரூ.529/-யை 22.11.2023க்குள் செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

    எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ.சேவை மையங்கள்) இணைய தளத்தில் உள்ள விவசா யிகள் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் காப்பீடு செய்ய வேண்டும். விவசா யிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ.அடங்கல், விதைப்புச்சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மேற்குறிப்பிட்ட பீரிமியத்தொகையை செலுத்தி வருகிற 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த தகவலை மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ×