search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாதானம்"

    • கடலூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்- போலீஸ்காரர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • காலில் அடிபட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரும் மிகவும் சோர்வுடன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை கடலூர் ரெட்டிச்சாவடி வழியாக சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரிய கங்கணாங்குப்பம் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அன்புமணி ராமதாஸ் வாகனம் சென்ற பிறகு, போலீசார் அங்கு போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது காலில் அடிபட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரும் மிகவும் சோர்வுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட போலீஸ்காரரை எச்சரிக்கை செய்து ஒழுங்காக பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது திடீரென்று நடுரோட்டில் இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீஸ்காரர் திடீரென்று சாலையில் விழுந்தார். அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து இருவரையும் சமாதானப் படுத்தினர். மேலும் அந்த போலீசார் திடீரென்று கீழே விழுந்ததற்கான காரணம் இன்ஸ்பெக்டர் தள்ளி விட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் நடுரோட்டில் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×