search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம்"

    • கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
    • யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம் என்றார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர் நகர் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள 11 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் அந்த கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    'யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் 24 மணி நேரமும் காவல் நிலைய கதவு திறந்தே இருக்கும், எங்களை வந்து அணுகுங்கள். அரசின் சார்பில் மாணவர்களுக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் இலவச ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுகிறது. கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது' என கூறிய உதவி ஆய்வாளர் பரமசிவம், பெற்றோரிடம் மன்றாடி 11 மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப செய்துள்ளார்,

    மாணவர்களின் பெற்றோரிடம் உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பாராட்டுகளை அள்ளி வருகிறது. இதுதொடர்பான செய்தியை ஷேர் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    அந்த வகையில், காமெடி நடிகர் தாடி பாலாஜி பாராட்டுகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×