search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டப்பணி ஆணைக்குழு"

    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.
    • வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    காஞ்சிபுரம்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்பநல, தொழிலாளர் நல வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி, நில எடுப்பு, வங்கி வழக்குகள் போன்ற அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.

    எனவே பொதுமக்கள் வழக்காளிகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தங்களது வக்கீல்கள் மூலம் வழக்குகளை மக்கள் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து சமரசம் பேசி தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கி கடன் வழக்குகள் தொடர்பாக நேரடியாக மனு அளித்தும் மேற்கூறிய தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாளில் சமரசம் பேசி வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.

    செங்கல்பட்டு மவாட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், ஆலந்தூர், பல்லாவரம், திருக்கழுக்குன்றம் ஆகிய நீதிமன்றங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.

    எனவே பொதுமக்கள் வழக்காடிகள் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த நீதி மன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் முறையிட்டு சமரசம் செய்து கொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து வைக்கப்படும் வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×