search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிப்பண்ணை"

    • பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை.
    • தமிழகம்-கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

    கோவை:

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.

    இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை-கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொள்ளாச்சியில் தமிழகம்-கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபாலபுரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர்.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-

    பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களின் டயர்களில் ரசாயன மருந்து கலவை தெளிக்கப்படுகிறது.

    தமிழகம்-கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளன என்றனர்.

    • கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
    • கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    தாராபுரம்

    தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் பகுதிகளில் முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் தனியாருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் கடந்த 4 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பலர் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பிரச்சினைக்கு காரணமான நஞ்சுண்டாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது கிராம மக்கள் கோழி பண்ணையில் இருந்து பரவும் ஈக்களால் தொடரும் தங்களது அவல நிலை குறித்தும், அதனால் பரவி வரும் நோய்த்தொற்று குறித்தும் புகார்களை கூறினர். உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

    ×