search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிகளுக்கான"

    • கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்பட உள்ளது.
    • இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக இன்று முதல் 14-ந் தேதி வரை வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடத்தப்பட உள்ளது.

    சிறிய குஞ்சுகள் முதல் பெரிய கோழிகள் வரை அனைத்து கோழி இனங்களையும் பாதிக்கும் முக்கியமான நச்சுயிரி தொற்று நோயான வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கெட் நோய் வெயில் காலங்களில் அதிக அளவில் பரவி 100 சதவீதம் வரை கோழிகளில் இறப்பு ஏற்படுத்த கூடியதாகும்.

    இந்நோய் கண்ட கோழிகள் வெள்ளைக்கழிச்சல், குறுகிக்கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும். நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும், கழுத்தை திருகி கொண்டும் இருக்கும். இந்நோய் பரவிய பின் மருத்துவம் செய்து குணப்படுத்துவது கடினம்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் இத்தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியினை செலுத்தி கோழிகளில் ஏற்படும் இறப்பினை தவிர்ப்பதன் மூலம் கோழிவளர்ப்பில் அதிகலாபம் பெறலாம்.

    இந்த அரியவாய்ப்பினை அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×