search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையம்"

    • மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோண த்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணி முதல் நடை பெற உள்ளது.

    மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்று தற்போது வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் தொழிற்பழகுனர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.7,700 மற்றும் 2 வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8,050 தொழிற்பழகுனர் பயிற்சி காலத்தில் உதவி தொகையாக வழங்கப்படும்.

    தொழிற்பழகுனர் பயிற்சி யினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற் பழகுனர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுனர் சான்று வழங்கப்படும். இச்சான்று பெற்றவர்கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலைவாய்ப்புகளில், ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரை விட முன்னுரிமை பெற்ற வராக கருதப்படுவர்.

    தொழிற்பழகுனர் சட்டத்தின் படி குறைந்த பட்சம் 30 பணியாளர் களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற் பழகுனர் இணைய தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தொழிற்பழகுனர் திட்டத்தினை செயல்படுத்து வது கட்டாயம் என்ப தால், அரசின் சட்ட நடவடிக்கை களை தவிர்க்கும் வகை யில் குறைந்த பட்ச பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்பழகுனர் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

    குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் தங்கள் முழு விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் திறன் வாய்ந்த மனிதவளம் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், ஒரு தொழிற்பழகுனருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.1500 வீதம் அனைத்து தொழில் பழகுன ர்களுக்கான ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.

    கூடுதல் விவரங்களுக்கு கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×