search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா நகர்"

    • 10 பேருந்துகளுடன் தொடங்கி பின்பு எண்ணிக்கையை 60-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது
    • ஊபர் செயலி மூலமாக பேருந்து குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள முடியும்

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனம் ஊபர் டெக்னாலஜிஸ். பொதுமக்களுக்கு எளிமையான முறையில், குறைந்த கட்டணத்தில் வாகன போக்குவரத்து, உணவு வினியோகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சேவைகளை வழங்குவதில் உலகெங்கும் பல நாடுகளில் ஊபர், பிரபலமாக விளங்குகிறது.

    இந்நிலையில் ஊபர், மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், அலுவலகம் செல்லும் மக்களுக்காக பேருந்து சேவையை தொடங்க போவதாக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயண தடங்களின் வழியாக, நகரில் அதிக மக்கள் வசிக்கும் இடங்களை, மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்க உள்ளது.

    தொடக்க நிலையில் 10 பேருந்துகளுடன் இயங்க உள்ள இந்த சேவையில், அடுத்த வருட மார்ச் மாதம் 60 ஏர்கண்டிஷன் வசதி உடைய பேருந்துகள் வரை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த பேருந்துகளில் 19லிருந்து 50 வரை பயணிகள் பயணம் செய்யலாம்.

    மேற்கு வங்கத்தில் சுமார் ரூ.84 கோடி ($10 மில்லியன்) முதலீடு செய்ய போவதாகவும், இதன் மூலம் அங்கு அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் ஊபர் அறிவித்துள்ளது.

    சில நாட்களுக்கு முன், மேற்கு வங்க அரசு, அம்மாநிலத்தில் தொழில்துறையில் முதலீடு செய்வதற்கு பல அயல்நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர்கள் பங்கேற்ற மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு (Bengal Global Business Summit) எனும் கூட்டம், மேற்கு வங்க அரசால் நடத்தப்பட்டது. அந்த சந்திப்பில் மேற்கு வங்க போக்குவரத்து துறையுடன், ஊபர் நிறுவனம், பேருந்து சேவைக்காக ஒப்பந்தம் புரிந்தது.

    ஊபர் நிறுவனத்தின் பேருந்து சேவையில் ஊபர் செயலி மூலம், பயணிகள் ஒரு வாரம் முன்னதாகவே இருக்கைகளை பதிவு செய்து கொள்ளவும், பேருந்து செல்லும் வழித்தடத்தை மொபைல் மூலம் அறிந்து கொள்ளவும், சென்று சேருமிடத்திற்கான பயண நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளவும் முடியும்.

    பயணிகளுக்கு டிஜிட்டல் பண பரிமாற்றம், 24 மணி நேர பாதுகாப்பு, வசதியான இருக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் இதில் வழங்கப்பட உள்ளது.

    அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் பெருகி வரும் மக்களின் பயண தேவைகளை எதிர்கொள்ள இது போன்ற சேவைகள் வருவதை வரவேற்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×