search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலு பொம்மைகள் விற்பனை"

    • நவராத்திரிக்காக சித்தூர் பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் கொண்டு வரபட்டுள்ளது.
    • பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ.4ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    செங்கோட்டை:

    நவராத்திரி விழாவை முன்னிட்டு செங்கோட்டை அருகே, களி மண்ணால் ஆன கொலு பொம்மைகளை விற்பனைக்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.

    இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் கூறியதாவது:-

    நவராத்திரிக்காக புதிய வரவாக ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்து அதிகளவில் கொலு பொம்மைகள் கொண்டு வரபட்டுள்ளது. இந்த பொம்மைகள் அனைத்தும், களி மண்ணால் தயாரிக்கப்பள்ளது.

    இதில் தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், கள்ளழகர் திருமண கோலம் மதுரை மீனாட்சி கோவில் திருப்பதி பிரமோத்சவம், போன் பொம்மைகள் செட், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகளும், பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கல்யாண செட், தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன், குறத்தி, அஷ்ட லட்சுமி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், கிரிக்கெட் வீரர் செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

    இது தவிர, கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் அதிகளவில் புதிய வரவாக நடப்பாண்டில் வாங்கி வந்துள்ளோம்.

    பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ.50 முதல், ரூ.4ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    நடப்பாண்டில் தொழிலாளர்கள் பொம்மைகள் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஈடுபட்டுள்ளனர். அதன் காரண மாக புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன. வருகிற 15-ந்தேதி விழா தொடங்க உள்ளதையடுத்து எதிர்பார்த்த விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த பொம்மைகளை செங்கோட்டை சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்கின்றனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் அதிக களாக ஆர்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் இத்தொழிலை நம்பிய எங்களுக்கு வருவாய் ஈட்டிய உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    ×