search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொய்யாவில் நோய் தாக்குதல்"

    • கொய்யா பழத்தில் புது வகையான அம்மை நோய், ஈரல் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் கொய்யா பழ விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
    • தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான கொய்யா பழத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணவாய்பட்டி, வீரசின்னம்பட்டி, கோம்பைபட்டி, திம்மணநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.இந்த நிலையில் கொய்யா பழத்தில் புது வகையான அம்மை நோய், ஈரல் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் கொய்யா பழ விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக வெள்ளை கொய்யா இந்த பகுதிகளில் அதிகமாக சாகுபடி செயல்படுகிறது.இதில் வைட்டமின்.பி, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, எலும்பு பலம், உடல் மினுமினுப்பு வயிற்று கோளாறு ஆகியவற்றுக்கு அருமருந்தாக அமையும்.

    மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை தீர்க்கும் வல்லமை கொண்டது.ஆகவே இதை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் இந்த ஆண்டு கொய்யா சாகுபடியில் அம்மை நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஆகவே தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான கொய்யா பழத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    ×