search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள கனமழை"

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம், ரூ.19 ஆயிரத்து 512 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaReliefFund
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  மழை வெள்ள பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கம் போல் பெய்யும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கோரத் தாண்டவம் ஆடியது.  

    கடந்த 9-ம் தேதி தொடங்கிய பருவமழை, தொடர்ந்ததால், நீர் வரத்து அதிகரித்தது. இதனால் 80 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டன. இதனால் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

    கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோய் உள்ளன. இருக்க இடமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    பல்லாயிரக்கணக்கான மின்சாரக் கம்பங்கள் சாய்ந்து பல கிராமங்கள் மின்சார இணைப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் பிளவுபட்டுக்கிடக்கின்றன.

    இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    நாம் ஒரு பேரழிவின் நடுவில் இருக்கிறோம், அதைச் சமாளிக்க இணைந்து ஒன்றுபட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு போக்குவரத்து துண்டிப்பால் உணவு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ஆட்சியாளர்களுக்கும், மீட்பு பணி மேற்கொள்ள போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால் ரூ.19 ஆயிரத்து 512 கோடி அளவிற்கு கேரள மாநிலம் சேதத்தை சந்தித்துள்ளதாக குறிப்பிட்ட விஜயன், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் இன்று மட்டும் 33 பேர் பலியானதாகவும்,எந்த மாநிலத்திலும் இல்லாத பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். #KeralaFloods #KeralaReliefFund
    கேரள மாநிலத்தில் இன்று பலத்த மழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். #KeralaRains #KeralaFlood #StandWithKerala #PMModi
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

    இதில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. 

    கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இன்று வரையே விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 8-ந் தேதி முதல் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். 



    மேலும், மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிம் மக்களை மீட்க நேற்று முதல் 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. ஆலுவா, காலடி, பெரும்பாவூர், மூவாற்றுப்புழா, சாலக்குடி போன்ற பகுதிகளில் தத்தளித்து வரும் மக்களை மீட்க உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவ்வாறு மீட்கப்படும் மக்கள் அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் 1568 முகாம்களில் 52,856 குடும்பங்களை சேர்ந்த 2.23 லட்சம் பேர் தங்கியிருக்கின்றனர்.

    எனினும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் இன்னும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    டெல்லியில் நேற்று மாலையில் நடந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கேரளாவுக்கு புறப்பட்டார். அவர், மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். அவருடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள் என தெரிகிறது.

    முன்னதாக நேற்று காலையில் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மாநில வெள்ள நிலவரங்களை கேட்டறிந்தார். இந்த இயற்கை பேரிடரை உன்னிப்பாக கவனித்து வரும் பிரதமர், இது தொடர்பாக மாநில முதல்-மந்திரியுடன் தொடர்ந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 8 மாவட்டங்களில் 17 மற்றும் 18-ந் தேதிகளில் (இன்று) பலத்த மழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஏற்கனவே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு மேலும் பீதியை கொடுத்துள்ளது.



    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளுக்கான செலவுக்காக மது வகைகளின் சுங்கவரியை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கு நவம்பர் 30-ந் தேதி வரை சுங்கவரி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  #KeralaRains #KeralaFlood #StandWithKerala #PMModi
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக தெலுங்கானா அரசு ரூ.25 கோடி, ஆந்திரப்பிரதேச அரசு ரூ.10 கோடி நன்கொடை அறிவித்துள்ளது. #ChandrababuNaidu #ChandrashekarRao #KeralalRain #Keralafloods
    ஐதராபாத் :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், ஆந்திரப்பிரதேச மாநில அரசு சார்பில் கேரளாவிற்கு ரூ.10 கோடி வெள்ள நிவாரன நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

    முன்னதாக, தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. டெல்லி அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குதாக அறிவித்தார்.  #ChandrababuNaidu #ChandrashekarRao #KeralalRain #Keralafloods
    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். #KeralaRains #KeralaFlood #StandWithKerala #PMModi
    திருவனந்தபுரம் :

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா வந்தடைந்தார். டெல்லியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின்னர் கேரளா புறப்பட்ட அவர் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி அல்போன்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.

    கனமழையினால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் மோடி நாளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து,  வெள்ள பாதிப்புகள் குறித்து பினராயி விஜயனிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. #KeralaRains #KeralaFlood #StandWithKerala #PMModi
    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா புறப்பட்டு செல்கிறார் தகவல் வெளியாகியுள்ளது. #KeralaFloods #KeralaRain #PMModi
    புதுடெல்லி  :

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா செல்ல உள்ளார். இன்று மாலை நடைபெற உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு அவர்  கேரளா புறப்பட்டு செல்கிறார்.

    வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிடும் அவர்  கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய மந்திரி அல்போன்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். #KeralaFloods #KeralaRain #PMModi   
    கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFlood #NarendraModi
    புதுடெல்லி :

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன.

    தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

    வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தை சூழ்ந்துள்ளது.

    ஓடுபாதை மற்றும் சுற்றுவட்டார இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் விமான நிலையம் 18–ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

    எதிர்பாராத கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என மோடி குறிப்பிட்டுள்ளார். #KeralaRains #KeralaFlood #NarendraModi
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
    திருவனந்தபுரம் :

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 39-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கேரளா வந்தடைந்தார். பின்னர் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி அல்போன்ஸ் உடன் அவர் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். 



    அதன் பிறகு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்,  வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறுகையில், ’வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நெருக்கடியான நேரத்தில் உள்ள கேரள மக்களின் துன்பத்தை புரிந்துகொள்ள முடிகிறது. வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும்.

    மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு 80.25 கோடி ஏற்கெனவே கடந்த மாதம் கேரளாவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இருந்து வருவதற்கு முன்னதாக இரண்டாவது கட்டமாக மேலும், 80.25 கோடி பேரிடர் நிவாரண நிதியாக அளிக்க ஒப்புதல் அளித்துள்ளேன்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodWarning #karnataka #Kerala
    புதுடெல்லி :

    கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால், முல்லைப்பெரியார் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் பெய்து வரும் கனமழையை அடுத்து தமிழகத்தில் காவிரி கரையோரமுள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு ஆணையம் கூறியுள்ளது. #FloodWarning #karnataka #Kerala 
    கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் இருந்து கொச்சிக்கு செல்ல இருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த நிலையில் நேற்றும், இன்றும் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    இந்நிலையில், கனமழை காரணமாக அம்மாநிலத்தின் கொச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுவதாக கொச்சி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் இருந்து கொச்சி செல்லும் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #KeralaRains
    ×