search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெமிக்கல்"

    • நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தொடர் மழை பெய்து வருவதால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் வீடு தூரம் விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் கவின்மிகு தஞ்சை இயக்கம், நாஞ்சிக்கோட்டை சிட்கோ சிறுகுறு தொழில் நல சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஏராளமானோர் மரக்கன்று நட்டு வைத்தனர்.

    அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை 50 ஆயிரத்தை தாண்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    நாம் மரக்கன்றுகள் நட்டால் மட்டும் போதாது .

    அதனை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். மரக்கன்று மரமாக வளர வேண்டும்.

    தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் 220 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பெரிய அளவிலான மரங்கள் சரணாலயமாக மாற்றியுள்ளோம்.

    தமிழகத்திலேயே இங்குதான் பெரிய அளவிலான மரங்கள் சரணாலயம் உள்ளது என்பது தஞ்சை மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை.

    இதேபோல் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசைவனம் உருவாக்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு திறந்தவெளி கிடங்கிற்கும் பொறு ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சிக்கோட்டையில் உள்ள அரசு நெல் குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

    உடனடியாக நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.

    நெல்கள் எந்தவித சேததமும் அடையவில்லை. ஆனால் சாக்குகள், தார்பாய்கள் சேதம் ஆகின.

    நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், செயலாளர் ராம் மனோகர், இணைச் செயலாளர் முத்துக்குமார், சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த், கண்காணிப்பாளர் சவரிராஜன், சிட்கோ சிறு குறு தொழில் நல சங்க தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×