search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்ைத திருமணம்"

    • குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாவட்டத்தில் செயல்படும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தக்கூடாது. மாறாக சட்டத்திற்கு முரணாக குழந்தைகளை பணியமர்த்தினால் சம்பந்த ப்பட்ட நிறுவனங்களின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கோ, 21 வயதிற்குட்பட்ட ஆணிற்கோ குழந்தை திருமணம் செய்து வைக்கக்கூடாது. அதனையும் மீறி செய்து வைப்பவர்கள் மீது குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006-ன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏற்கனவே படித்த பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அக்குழந்தைகளை அதே பள்ளியில் தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்க வேண்டும்.

    அந்த குழந்தைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கை செய்ய மறுக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியில் அங்கீகாரத்தினை ரத்து செய்யவும், பள்ளி நிர்வாகத்தின்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர்மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் கவிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்மீனாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×