search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பையில் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு"

    • சாலையின் ஓரங்களில் குப்பை, இறைச்சிக் கழிவுகள், தேங்காய், நுங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர்.
    • குப்பைகளை தீ வைத்து எரித்து விடுவதால் குடியிருப்புகளில் கரும்புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் இருந்து எழில் நகர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.இங்கு சாலையின் ஓரங்களில் குப்பை, இறைச்சிக் கழிவுகள், தேங்காய், நுங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர்.

    இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் மாலை நேரங்களில் குடியிருப்புகளில் கொசுக்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.

    இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் குப்பைகளை தீ வைத்து எரித்து விடுவதால் குடியிருப்புகளில் கரும்புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள், சுவாசக் கோளாறில் உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகிலேயே மின் கம்பம் உள்ளது. எதிர்பாராத விதமாக மின் கம்பியில் தீ விபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    ஆகவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக குப்பைகளில் தீ வைத்து எரிப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×