search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage burning"

    • சாலையின் ஓரங்களில் குப்பை, இறைச்சிக் கழிவுகள், தேங்காய், நுங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர்.
    • குப்பைகளை தீ வைத்து எரித்து விடுவதால் குடியிருப்புகளில் கரும்புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் இருந்து எழில் நகர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.இங்கு சாலையின் ஓரங்களில் குப்பை, இறைச்சிக் கழிவுகள், தேங்காய், நுங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர்.

    இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் மாலை நேரங்களில் குடியிருப்புகளில் கொசுக்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.

    இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் குப்பைகளை தீ வைத்து எரித்து விடுவதால் குடியிருப்புகளில் கரும்புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள், சுவாசக் கோளாறில் உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகிலேயே மின் கம்பம் உள்ளது. எதிர்பாராத விதமாக மின் கம்பியில் தீ விபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    ஆகவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக குப்பைகளில் தீ வைத்து எரிப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்
    • புகை மூட்டத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பள்ளிகொண்டா பேரூராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளில் தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகளை தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்பட்டு வருகிறது.

    அவ்வாறு கொட்டப்படும் மக்காத குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது அப்புறப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சில நேரங்களில் சமூக விரோத கும்பல்கள் தேக்கி வைக்கப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு தீமூட்டும் போது ஏற்படும் புகை மூட்டமானது அருகில் உள்ள சென்னை, பெங்களூர் நெடுஞ்சாலையில் சூழ்ந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் என அச்சமும் நிலவி வருகிறது. மேலும் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சென்று துர்நாற்றம் வீசுகின்றது.

    எனவே இப்பகுதியில் தீயிட்டுக் கொளுத்தும் சமூக விரோத கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருவொற்றியூரில் குப்பைகளை எரித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது. #garbageburning
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே பல ஏக்கர் ரயில்வே நிலம் உள்ளது. இங்கு காலியாக உள்ள இடத்தில் மாநகராட்சியும் , தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் குப்பைகளை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் மலைபோல் குவிந்துள்ளது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், தொடர்ந்து குப்பை கொட்ட கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை மலைபோல் குவிந்துள்ள குப்பையில் மர்மநபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து குப்பையில் பற்றிய தீயை அணைத்தனர். #garbageburning

    ×