search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பைகள் எரிவதை படத்தில் காணலாம்
    X
    குப்பைகள் எரிவதை படத்தில் காணலாம்

    திருவொற்றியூரில் குப்பைகளை எரித்ததால் புகை - பொதுமக்களுக்கு மூச்சு திணறல்

    திருவொற்றியூரில் குப்பைகளை எரித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது. #garbageburning
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே பல ஏக்கர் ரயில்வே நிலம் உள்ளது. இங்கு காலியாக உள்ள இடத்தில் மாநகராட்சியும் , தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் குப்பைகளை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் மலைபோல் குவிந்துள்ளது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், தொடர்ந்து குப்பை கொட்ட கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை மலைபோல் குவிந்துள்ள குப்பையில் மர்மநபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து குப்பையில் பற்றிய தீயை அணைத்தனர். #garbageburning

    Next Story
    ×