search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா கடத்தல்"

    • மேலும் 26 கிலோ குட்கா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அவரிடம் இருந்து காரையும், 320 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் சிப்காட் போலீசார் பெங்களூரு - ஓசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.

    அதை வைத்திருந்த கிருஷ்ணகிரி புதுப்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குமார் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 26 கிலோ குட்கா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே போல ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 320 கிலோ ஹான்ஸ், பான்மசாலா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து குட்கா கடத்தியதாக கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காரையும், 320 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
    • சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற டாடா இண்டிகா வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த காரில் ஹான்ஸ் 20 கிராம் அளவு கொண்ட 2250 பாக்கெட்டில் 45 கிலோவும், கூல்லிப் 9 கிராம் அளவு உள்ள 720 பாக்கெட்டில் 6.480 கிலோவும் விமல் பாக்கு 2.8 கிராம் அளவுள்ள 4500 பாக்கெட்டில் 12.600 கிலோவும் வி.ஐ. பாக்கு 8.4 கிராம் அளவுள்ள 1800 பாக்கெட்டில் 18.00 கிலோவும் உள்ள போதை பொருட்களை இருந்தது.

    விசாரணையில் சிதம்பரம் கூளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 29) அதே கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி (வயது 47) ஆகியோர் 65 கிலோ குட்காவை கடத்தி வந்துள்ளனர்.அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் சேலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரிடத்தில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்துள்ளனர் .என்பது தெரிய வந்துள்ளது. போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.

    இதில் சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

    ×