search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளைகள்"

    • அதிக எண்ணிக்கையிலான கதிர் உள்ள தூர்கள் மற்றும் அடர்த்தியான அடித்தூர் மற்றும் சாயாத தன்மையுடையது.
    • ஒவ்வொரு குத்திலும் அதிக கிளைகள் வெடித்து அதிக கதிர்களும் காணப்படுகிறது என்றார்.

    மதுக்கூர்:

    தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் வழங்கப்பட்ட புதிய நெல் ரகம் வரிசை ஏடி 12 132 பிரபலப்படுத்தும் வயல் தின விழா மதுக்கூர் வட்டாரம் உலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது.

    நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் பாபு, வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் இயக்குனர் சுப்ரமணியன் பேசும்போது, ஏ.டி.39-க்கு மாற்றாக எடிடி 58 என வெளியிடப்படவுள்ள இந்த ரகமானது அதிக எண்ணிக்கையிலான கதிர் உள்ள தூர்கள் மற்றும் அடர்த்தியான அடித்தூர் மற்றும் சாயாத தன்மையுடையது.

    அக்டோபர் 20 முதல் நவம்பர் மாதத்திற்குள் இந்த ரகத்தினை தேர்வு செய்து சாகுபடி செய்வதன் மூலம் பிப்ரவரி 20 -க்குள் அறுவடைக்கு வந்து விடும் என்றார்.

    ஏடிடி58 ரகத்தினை சாகுபடி செய்துள்ள விவசாயி ஆரோக்கியசாமி இந்த ரகத்தின் இலைகள் வெளீர் பச்சை நிறத்தில் இருப்பதுடன் ஒவ்வொரு குத்திலும் அதிக கிளைகள் வெடித்து அதிக கதிர்களும் காணப்படுகிறது என்றார்.

    வடுவூரிலிருந்து வருகை புரிந்த முன்னோடி விவசாயி குபேந்திரன், பட்டுக்கோட்டை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு, ஆடுதுறை உதவி பேராசிரியர் தண்டபாணி, வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர் உள்ளிட்ட பலர் பேசினர்.

    இதில் முன்னோடி விவசாயிகள் அசோகன், ஆவிக்கோட்டை பாண்டியன், சேகர், பாலமுருகன், நெம்மேலி அறிவு செல்வன், திருஞானம், கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மற்றும் வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் நிகழ்ச்சிக்–கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×