search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளினிக்கில்"

    • முகமூடி கொள்ளையன் அட்டகாசம்
    • கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏபிமோசஸ் (வயது 44). இவரது மனைவி மெர்சி. ஹோமியோபதி டாக்டரான இவர் கேப் ரோடு பகுதியில் கிளினிக் வைத்துள்ளார்.

    டாக்டர் மெர்சி தினமும் கிளினிக்கில் நோயாளிகளை பார்ப்பது உண்டு. அதன்படி கிளினிக் வந்த அவர், பணிகள் முடிந்ததும் வழக்கம்போல் கிளினிக்கை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலையில் மெர்சி கிளினிக்கிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. எனவே யாரோ மர்ம மனிதன், உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இது பற்றி கோட்டார் போலீசில் ஏபிமோசஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கிளினிக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் மென்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஏபிமோசஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது. கொள்ளை யன் ஒருவன் முகமூடி அணிந்து செல்வது போன்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நடந்த சில திருட்டு சம்பவங்களிலும் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கைவரிசையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த கொள்ளையிலும் அவர்கள் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×