search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்று தண்ணீரில்"

    • பாலமுருகனை மேலே வர விடாமல் தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார்.
    • போலீசார் சதீஷ் என்கிற கோபாலை கைது செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகில் உள்ள கம்புளியம்பட்டி சாணார்பாளையத்தை சேர்ந்தவர் பாரதி. இவர் தனது கணவர் குமாரசாமி யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்த தனது மகன் பாலமுருகனுடன் (12) தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பால முருகன் சாணார்பாளை யத்தில் உள்ள ஒரு தோட்ட த்து கிணற்றில் நீச்சலடித்து விளையாடி வருவது வழக்கம். அது போலவே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி பாலமுருகன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளான்.

    குளித்து முடித்து விட்டு மேலே வரும்போது கிணற்று படியில் யாரோ கழட்டு விட்ட செருப்பு ஒன்று பாலமுருகனின் கால்பட்டு கிணற்றுக்குள் நின்று கொண்டிருந்த மேற்கு சாணார்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ் என்கிற கோபால் (27) என்பவர் மீது விழுந்தது.

    இதனால் கோபமுற்று கோபால் யாருடா என்மீது செருப்பை தள்ளிவிட்டது என கேட்க, பாலமுருகன் தனது கால் பட்டு தெரியா மல் செருப்பு விழுந்து விட்டது என கூறினான்.

    பின்னர் நானே வந்து அந்த செருப்பை எடுத்து வருகிறேன் என்றும் கூறி கிணற்றுக்குள் குதித்து செருப்பை எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்கு அருகில் பாலமுருகன் நீந்தி வரும்போது, கோபத்தில் இருந்த சதீஷ் என்கிற கோபால், பாலமுருகனை மேலே வர விடாமல் தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார்.

    இதனால் பாலமுருகன் மூச்சு திணறி இறந்து விட்டார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் என்கிற கோபாலை கைது செய்தனர். இது தொடர்பாக பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண பிரியா, சதீஷ் என்கிற கோபாலுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,500 அபரா தமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் திருமலை ஆஜராகி வழக்கை நடத்தினார்.

    ×