search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் எரிந்து நாசம்"

    • சுதாகர் தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் தீபாவளி கொண்டாடினார்.
    • தீபாவளி என்பதால் பட்டாசு ஏதாவது பட்டு தீப்பிடித்ததா? அல்லது காரினுள் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை.

    செஞ்சி:

    செஞ்சி அருகே உள்ள பரதன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 25). இவர் தனக்கு சொந்தமாக சைலோ கார் வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று தீபாவளி அன்று தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் தீபாவளி கொண்டாடினார்.

    அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து உடனடியாக செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் செஞ்சி தீயணைப்பு அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சசுபதி ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    எனினும் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. தீபாவளி என்பதால் பட்டாசு ஏதாவது பட்டு தீப்பிடித்ததா? அல்லது காரினுள் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீயை அணைப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர்.

    • ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47).
    • இவரது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட் , 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47). நேற்று அதிகாலை இவரது வீட்டில் வேலை செய்யும் வேல்முருகன் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை பராமரிப்பதற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கார் செட்டில் கார் பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தூங்கிக் கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை எழுப்பியுள்ளார். அவர் வந்து பார்த்த போது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட், கார் செட், 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து அரிகிருஷ்ணன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கார் தானாக எரிந்ததா அல்லது வேறு யாரேனும் தீ வைத்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    ×