search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல் மருத்துவ முகாம்"

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • திண்டுக்கல் பள்ளிகளில் இன்று மருத்துவமுகாம் நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்து வந்தனர். குறிப்பாக காலாண்டுதேர்வு நெருங்கி வரும் சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்டு வரும் பருவகால நோய்களினால் தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இன்று மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அதன்படி திண்டுக்கல் எம்.எஸ்.பி மற்றும் புனிதவளனார் பள்ளிகளில் இன்று மருத்துவமுகாம் நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

    ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் தொடர்ந்து சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும். முககவசம் அணியவேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×