search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள் விலைவீழ்ச்சி"

    • ஆடி மாதத்தில் கோவில்க ளில் காய்கறிகள் வாங்குவது குறைந்து விடுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டி லும் காய்கறிகளின் விலை யும் பாதியாக குறைகிறது.
    • ஆடி மாதம் தொடங்கியதை யொட்டி தக்காளி, சின்னவெங்காயத்தை தவிர மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    திண்டுக்கல்:

    ஆடி மாதம் தொடங்கி னாலே கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு கிடா வெட்டி கறி விருந்து படைக்கப்படும். பெரு ம்பாலான கோவில்களில் அசைவ உணவுகளை பக்த ர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் கோவில்க ளில் காய்கறிகள் வாங்குவது குறைந்து விடுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டி லும் காய்கறிகளின் விலை யும் பாதியாக குறைகிறது.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் மொத்தம் 291 கடைகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் இங்கு விற்பனை செய்கின்ற னர்.

    இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியதை யொட்டி தக்காளி, சின்னவெங்காயத்தை தவிர மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்ற காய்கறிகள் தற்போது, ரூ.20 முதல் ரூ.40 வரையே விற்பனை ஆகிறது.

    அதன்படி ரூ.70 க்கு விற்ற ஒரு கிலோ கேரட் தற்போது ரூ.40க்கும், ரூ.50 க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.25க்கும் விற்கப்பட்டது. ரூ.100க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.50க்கும், ரூ.60க்கு விற்ற கொத்தமல்லி கட்டு ரூ.30க்கும் விலைபோனது. ரூ.50க்கும் விற்ற முள்ளங்கி ரூ.15க்கும், ரூ.50 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.20க்கும், ரூ.50க்கு விற்ற பீட்ரூட் ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.120க்கு விற்ற பீன்ஸ் ரூ.80க்கு விலைபோனது.

    மொச்சையை பொறுத்த வரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே சீசன் இருக்கும். ஆனால் தேனி மாவட்டத்தில் தற்போது மொச்சை சாகு படி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ மொச்சை ரூ.50 க்கு தற்போது விற்பனை ஆகிறது.

    தினமும் ஒரு டன் வரை மொச்சை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சீசன் காலத்தில் இதன் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் மார்க்கெட்டில் வழக்கமான விற்பனை நடைபெறவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    ×