search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி தோட்டம்"

    • அரசு மாணவிகள் விடுதியில் காய்கறி தோட்டம் அமைத்தவர்களை கலெக்டர் பாராட்டினார்.
    • அனைத்து விடுதிகளிலும் காய்கறி தோட்டம் வளர்த்து பயன் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு சீர்மரபினர் மாணவிகள் கல்லூரி விடுதியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மாணவிகள் விடுதிக்கு சென்று மாணவி களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விசாரித்தார். மேலும் அடிப்படை வசதி கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து மாணவிகள் விடுதி யின் வளாகத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி தோட்டம் அமைத்து கொடுக்கப்பட்டு அதை மாணவிகள் பரா மரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு அதன் பயன்கள் குறித்து மாணவி களிடம் கேட்டறிந்து பாராட்டினார்.

    மேலும் மாணவிகள் காய்கறி தோட்டம் வளர்ப்ப தில் ஆர்வம் காட்ட வேண்டும். இதே போல் அனைத்து விடுதிகளிலும் காய்கறி தோட்டம் வளர்த்து பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    பின்னர் காய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறி வகைகளை மாணவிகள் முன்னிலையில் பறித்து மதியம் உணவிற்கு பயன்படுத்த வழங்கினார். அனைத்து மாணவிகளையும் பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், தோட்ட கலைத்துறை இணை இயக்குநர் நாகராஜன், விடுதி காப்பாளர்கள் கிருஷ்ண வேணி, மணிமொழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் ராகேஷ், புனிதா சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×