search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VEGETABLE GARDEN"

    • வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும்
    • வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும்.

    திருத்துறைப்பூண்டி

    திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான வளர் இளம்பருவ மாணவ- மாணவிகளுக்கான வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கும் போட்டியில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்:-

    மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய அரிசி, தானியங்கள், இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகிக்க வேண்டும்.

    வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.பின்னர், வட்டார திட்ட அலுவலர் அபிநயா பங்கேற்று பேசுகையில்:-

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்து பராமரிப்பது நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த 5 மாணவர்களை தேர்வு செய்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும் என்றார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், வட்டார மேற்பார்வை யாளர்கள் கமலா, ரேணுகா, சந்திரா, ஊட்டசத்து ஒருங்கிணை ப்பாளர் ராஜவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அய்யலூர் பேரூராட்சியில் உள்ள தங்கமாபட்டியில் ரூ.82 கோடியில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் போன்ற உணவு பொருட்களை பாதுகாக்க உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018 ம் ஆண்டின்படி தமிழ்நாட்டில் 10 மெகா உணவு பூங்கா அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் பேரூராட்சியில் உள்ள தங்கமாபட்டியில் ரூ.82 கோடியில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் போன்ற வேளாண் பொருட்களை உணவுப் பொருட்களாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் உணவு பூங்கா அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு முதல் அதற்கான வேலைகள் நடைபெறத் தொடங்கின.

    இதற்காக 10 ஏக்கரில் உணவு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு குளிப்பதனால் கட்டமைப்புகள் வணிகம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து அய்யலூர் தக்காளி விவசாயி கூறுகையில்:- அய்யலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அய்யலூரில் தக்காளிக்கென தனி மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. அய்யலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இருப்பினும் தக்காளிக்கு ஆதார விலை கூட இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றன. வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் உழவு கூலி கூட மிஞ்சாது எனவும் கூறுகிறார். அய்யலூர் தங்கம்மாபட்டியில் உருவாகிக் கொண்டிருக்கும் உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுமேயானால் எங்கள் பகுதியில் தக்காளி ஜூஸ் செய்யும் கம்பெனிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நிரந்தர விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் கூறுகையில் :- உணவு பூங்கா பணிகளை வேளாண்துறை விரைந்து முடிக்க வேண்டும் எனவும். அய்யலூர் எரியோடு போன்ற சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத் தொழிலை பிரதான தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர். மேலும் புளி உடைத்தல், விதை எடுத்தல் போன்ற அத்தியாவசியமான தொழிலே செய்து வருகின்றனர். இந்த உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு வந்தால் விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் இந்த உணவு பூங்காவில் உணவு பதப்படுத்தப்படும் கிடங்கு உள்ளதால் அதிக அளவு விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
    • மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர்.

    ஊட்டி:

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இது சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது.

    ஊட்டியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளாகினர்.

    கோத்தகிரி, குந்தா, கெத்தை, பாலகொலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஓடை வாய்க்கால்களில் வெள்ளம் கரைபுரண்டது. அப்போது அங்கு திடீர் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மழை வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது.

    ஊட்டி, கோத்தகிரி, குந்தா, கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர். அங்கு உள்ள விளைநிலங்களை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து வந்த நகராட்சி, ஊராட்சி ஊழியா்கள், நீர்வரத்து கால்வாய் ஓடையில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தூா்வாரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • 4 ஆயிரத்து 800 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் தங்களுக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் இடவசதிக்கேற்ப உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் இந்த திட்–டம் செயல்படுத்தப்படுகிறது

    இந்த திட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 250 எண்ணிக்கையில் மாடித்தோட்டம், ஊரக பகுதிகளில் 2,500 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள், 4 ஆயிரத்து 500 எண்ணிக்கையில் ஊட்டச்சத்து விதை தொகுப்புகள் என ரூ.20 லட்சத்து 13 ஆயிரம் மானியத்தில் 10 ஆயிரத்து 250 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு திட்டத்தில் 4 ஆயிரத்து 800 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்ணிக்கையில் மூலிகை தோட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அறிந்து கொள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • அரசு மாணவிகள் விடுதியில் காய்கறி தோட்டம் அமைத்தவர்களை கலெக்டர் பாராட்டினார்.
    • அனைத்து விடுதிகளிலும் காய்கறி தோட்டம் வளர்த்து பயன் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு சீர்மரபினர் மாணவிகள் கல்லூரி விடுதியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மாணவிகள் விடுதிக்கு சென்று மாணவி களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விசாரித்தார். மேலும் அடிப்படை வசதி கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து மாணவிகள் விடுதி யின் வளாகத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி தோட்டம் அமைத்து கொடுக்கப்பட்டு அதை மாணவிகள் பரா மரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு அதன் பயன்கள் குறித்து மாணவி களிடம் கேட்டறிந்து பாராட்டினார்.

    மேலும் மாணவிகள் காய்கறி தோட்டம் வளர்ப்ப தில் ஆர்வம் காட்ட வேண்டும். இதே போல் அனைத்து விடுதிகளிலும் காய்கறி தோட்டம் வளர்த்து பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    பின்னர் காய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறி வகைகளை மாணவிகள் முன்னிலையில் பறித்து மதியம் உணவிற்கு பயன்படுத்த வழங்கினார். அனைத்து மாணவிகளையும் பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், தோட்ட கலைத்துறை இணை இயக்குநர் நாகராஜன், விடுதி காப்பாளர்கள் கிருஷ்ண வேணி, மணிமொழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் ராகேஷ், புனிதா சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காய்கறி தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • அரசு பள்ளியில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, எலவனுாரில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், வட்டார தோட்டக் கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை வகித்தார். எலவனூர் பஞ்சாயத்து தலைவர் இந்துமதி, காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷாகுல் சிம்ரான் அலி, தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×