காய்கறி தோட்டம் அமைக்கும் பணி

காய்கறி தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.அரசு பள்ளியில் நடைபெற்றது
காய்கறி தோட்டம் அமைக்கும் பணி
Published on

கரூர்:

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, எலவனுாரில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், வட்டார தோட்டக் கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை வகித்தார். எலவனூர் பஞ்சாயத்து தலைவர் இந்துமதி, காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷாகுல் சிம்ரான் அலி, தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com