search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஸ்தூரி"

    வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கலாம் என்று நடிகை கஸ்தூரி தூத்துக்குடி கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். #SterliteProtest
    கன்னியாகுமரி:

    நடிகை கஸ்தூரி இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் பகவதி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்தார்.

    எனது சொந்த மாவட்டம் தூத்துக்குடி தான். இங்குள்ள உறவினர்களை பார்ப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் தற்போது அங்கு சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லை என்பதால் நான் தூத்துக்குடிக்கு செல்லவில்லை.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. அது கண்டனத்துக்குரியது. அரசு இந்த போராட்டத்தை அமைதியான முறையில் மனிதாபிமான ரீதியில் தீர்த்து வைத்து இருக்கலாம். ஆனால் அதற்கு பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    தங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக தூத்துக்குடியில் போராட்டம் நடந்து வருகிறது. 100 நாட்கள் இந்த போராட்டம் நடந்தும் அரசு கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்து வந்தது. இதுவரை போராட்டம் எதுவுமே நடைபெற்றதாகவே அரசு கருதவில்லை. இதனால் தற்போது போராட்டம் பெரிதாக வெடித்து விட்டது. போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.


    தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை அங்கு சட்டத்தை மீறி செல்ல விரும்பவில்லை. அங்குள்ள எனது உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்துள்ளேன்.

    நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்போது நடைபெறுவதை பார்க்கும்போது வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதை விட களத்தில் இறங்கி மக்களை சந்திக்கலாம் என்று விரும்புகிறேன். ஆனாலும் எனது அரசியல் வருகையை காலம் தான் தீர்மானிக்கும். ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். நடிகர்களுக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று நினைக்க கூடாது. அவர்கள் அரசியலுக்கும் தகுதியானவர்கள் தான். யார் அரசியலுக்கு வந்தாலும் நான் வரவேற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest
    ×